
இந்தியாவின் அக்னி-5 : பதுங்குக் குழிகளை அழிக்கும் புதிய ஏவுகணை விரைவில்!
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), மிக முக்கியமான முன்னேற்றமாக, மிக ஆழமான நிலத்தடியில் அமைந்த பதுங்கு குழிகளை அழிக்கும் வகையில் புதிய 'பங்கர் பஸ்டர்' (Bunker Buster) வகை ஏவுகணையை உருவாக்கி வருகிறது. இது, இந்தியாவின் ஏற்கனவே உள்ள அக்னி-5 ஏவுகணையின் புதிய வடிவமாகும்.
80 முதல் 100 மீட்டர் ஆழம் வரை ஊடுருவும் சக்தி:இந்த புதிய ஏவுகணை, நிலத்தடியில் 80 முதல் 100 மீட்டர் வரை ஊடுருவிச் சென்று வெடிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, சிமென்ட், கான்கிரீட் மற்றும் பாறை அடுக்குகளுக்குக் கீழே பதுங்கியிருக்கும் அணு ஆயுத உற்பத்தி நிலையங்கள், ராணுவ கட்டிடங்கள், உள்கட்டமைப்பு தளங்கள் ஆகியவற்றை அழிக்கும் வல்லமை உடையதாகும்.
இந்த ஏவுகணையின் முக்கிய அம்சங்கள்:
போர்க் கப்பல்களில் ஏற்றி எடுத்துச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணையின...