Saturday, January 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்: விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச்செயலாளரை சஸ்பெண்ட் செய்தார் கட்சித் தலைவர் திருமாவளவன்!

ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆப் காமன்’ அமைப்பின் சார்பில், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்‘ என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் நிலவும் மன்னராட்சி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கட்சியின் நலன்களை கருத்தில் கொண்டு, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட மூவரின் தலைமையிலான நிர்வாகக் குழு, ஆதவ் அர்ஜுனாவின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில், ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இந்த ஆதவ் அர்ஜுனா, ‘லாட்டரி மன்னன்’ சாண்டியாகோ மார்ட்டினின் மருமகன் ஆவார்.