சிரிய இராணுவ தளங்களில் இஸ்ரேலிய தாக்குதலால் பூகம்ப குண்டுவெடிப்புகளின் உணரிகளில் பதிவு செய்யப்பட்டது. அது வானத்தில் பட்டாசு வானவேடிக்கை போல காட்சி அளித்தது.
போர் கண்காணிப்புக் குழு, “கடலோர டார்டஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள சிரிய இராணுவ தளங்கள் கடுமையாக தாக்கப்பட்டது” என்று அறிவித்திருக்கிறது. இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின் விளைவாக சிரியாவில் உள்ள டார்டஸ் குண்டு வெடிப்பு மிகவும் பெரியதாக இருந்தது, ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக நிலநடுக்கம் எச்சரிக்கை தூண்டப்பட்டது.