சீனாவில் குழந்தை பெற்றால் பணம் தருகிறது அரசு!
சீனாவில் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்துவரும் சூழ்நிலையை எதிர்கொண்டு, மக்களை அதிக குழந்தைகள் பெற ஊக்குவிக்கும் வகையில், அதன் அரசு பரபரப்பான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, மூன்று வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான், தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் – மொத்தம் 10,800 யுவான், இந்திய மதிப்பில் சுமார் ரூ.41,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், 2025 ஆம் ஆண்டில் தொடங்கி அமல்படுத்தப்படும் என சீன அரசின் செய்தி ஊடகம் சிசிடிவி தெரிவித்துள்ளது. இந்த நிதி உதவித் திட்டம், நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் சீன அரசின் மானியமாகும், என்பது இதன் முக்கிய சிறப்பு.
இந்த மானியம், சுமார் 20 மில்லியன் குடும்பங்களுக்கு நிதிசார்ந்த உதவியாக அமையும் என சீன உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2022 மற்றும் 2024 க்கு இடையில் பிறந்த குழந்தைகள் கொண்ட குடும்பங்களும், இந்த மா...









