சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம். நாசா விளக்கம்!
நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நாம் அனைவரும் அறிந்த ஒரு பிரபலம் ஆவார். இவர் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்று வந்த இவர் மூன்றாவது முறையாக கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் அவரும், பேரி வில்மோரும் விண்வெளி நிலையம் சென்று 8 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
கடந்த 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம்' என நாசா விளக்கம் அளித்துள்ளது.
அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் எடுத்தும் எந்த பலனும்...









