பூமியின் சுழற்சியை மந்தப்படுத்தும் சீன அணை: நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மனிதர்கள் வாழவும் வளரவும் தேவையான அனைத்து இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டது பூமி. ஆக்ஸிஜன், நீர், வானிலை அமைப்பு உள்ளிட்ட பரவலான சூழல் காரணிகள் அனைத்தும் பல்வேறு உயிரினங்களின் வாழ்வை பாதுகாக்கின்றன. இந்த வாழ்வு வளமான கிரகத்தின் ஒரு மிக முக்கிய அம்சம் அதன் 'சுழற்சி வேகம்'. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் பூமி மேற்கிலிருந்து கிழக்கே ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்கிறது.
இந்நிலையில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொறியியல் கட்டமைப்பு, பூமியின் இந்த இயல்பான சுழற்சியையே பாதிக்கிறது என்றால்? நம்ப முடியாத இந்த தகவலை தற்போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா வெளியிட்டுள்ளது.
மனிதர்களின் திட்டம் பூமியின் சுழற்சியை பாதிக்கிறது:நாசாவின் சமீபத்திய அறிவியல் ஆய்வு, மனிதரின் பொறியியல் முன்னேற்றங்களுக்கும் பூமியின் சுழற்சி வேகத்திற்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதை வெளிச்சத்திற்கு கொ...









