மியான்மரின் உள்நாட்டுப் போர், ராணுவத் நடத்திய விமான தாக்குதல், பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!
தென்கிழக்காசிய நாடான மியான்மரில் (முந்தைய "பர்மா") உள்நாட்டு போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய மியான்மரில் உள்ள தபாயின் நகரைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் நடந்த ராணுவ விமான தாக்குதலில், பள்ளி மாணவர்கள் 20 பேர் உட்பட பலர் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரில் கடந்த சில ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நிலவிவருகிறது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற புரட்சி மூலம் ஜனநாயகத் தலைவர்களை பதவி நீக்கம் செய்த ராணுவம், அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறது. அதன் பின்னர், மக்கள் எதிர்ப்பும், கிளர்ச்சிகர குழுக்களின் ஆயுதப் போரும் தொடர்ந்தே வருகின்றன.
கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் பகுதிகளை தாக்கும் ராணுவம்:மியான்மரின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், ராணுவ ஆட்சிக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை, மியான்மர் ராணுவம் விமானங்களில் இருந்த...









