கள் இறக்க அனுமதி வழங்காவிட்டால் ஜனவரி 21-ல் போராட்டம்!
காவிரி நீர்ப்பங்கீட்டு விவகாரத்தில் மாதாந்திர நீர்ப்பங்கீட்டு முறைக்கு பதிலாக தினசரி அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான சட்டப்பூர்வ தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கள் இறக்குவதற்கான தடையை நீக்காவிட்டால், வரும் ஜனவரி 21-ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் செப்டம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பி...









