வயநாட்டில் ஆட்கொல்லி புலி இறந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது!
வயநாடு மக்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் வகையில், பிலக்காவு வனப்பகுதிக்குள் விரைவு மீட்புக் குழுவினரால் ஏற்கனவே ஒரு பெண்ணை கொன்ற புலியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
வயநாட்டில் ஆட்கொல்லி புலியை உயிரோடவோ அல்லது சுட்டுக் கொன்று பிடிக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் வனத்துறையினர் காட்டிற்குள் நுழைந்த போது புலி மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம் மானந்தவாடியைச் சேர்ந்த ராதா என்பவர் காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது புலி தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்குப் பின்னர், அந்த புலியை உயிருடன் பிடிக்கவோ அல்லது சுட்டுக்கொல்லவோ மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
பஞ்சரக்கொல்லி பகுதியில், தலைமை வன கால்நடை அதிகாரி டாக்டர் அருண் சக்கரியாவின் தலைமையில் ஒரு சிறப்பு குழு முகாமிட்டது. புலி நடமாடுவதை கண்காணித்...









