
சைபர் அடிமைகளாக இருக்கும் தமிழர்கள்: சிறப்பு அறிக்கை!
தென் தமிழகத்தில் கணினி துறையில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் பெரும்பாலும் வெளிநாடு சென்று வேலை செய்வதையே விரும்புகின்றனர். இவர்களை குறி வைத்து தூக்கும் கம்போடியா மற்றும் லாவோஸ் நாட்டில் உள்ள இணைய குற்றவாளி கும்பல்.
கணினி வேலை, கை நிறைய சம்பளம் என்று கூறி பல இளைஞர்களை கம்போடியா நாட்டிற்கு அழைத்துச் சென்று ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் அடிமைகளாக மாற்றி வருகின்றனர். வங்கி அதிகாரிகள் போல எப்படி பேச வேண்டும்; பங்கு சந்தை முதலீடுகளை ஈர்ப்பது போல, வாட்ஸாப்பில் எப்படி தகவல் அனுப்ப வேண்டும்; சிக்கிய நபர்களை சிந்திக்க விடாமல் எப்படி மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்பது குறித்து, அவர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்கின்றனர்.
பாஸ்ப்போர்ட்டை பறித்து வைத்துக் கொண்டு பணி அமர்த்தப்படும் இந்த இளைஞர்கள் வேலை செய்ய மறுத்தால் பட்டினி போட்டும், உடலில் மின்சாரம் பாய செய்தும் சித்ரவதை ச...