பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பதை கட்டாயமாக்கியுள்ளது உத்தரப் பிரதேச அரசு!
மாணவர்களின் திரை நேரத்தைக் குறைத்து, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித் துறை, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பைக் கட்டாயமாக்கியுள்ளது. இதைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, மாவட்ட மற்றும் மாநில அளவிலான கல்வி அதிகாரிகளுக்கு விரிவான வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
கூடுதல் தலைமைச் செயலாளர் பார்த்த சாரதி சென் சர்மா பிறப்பித்த உத்தரவின்படி, செய்தித்தாள்கள் தினசரி பள்ளி வாழ்க்கையின் ஒரு வழக்கமான பகுதியாக மாற வேண்டும். இந்த நடவடிக்கை மாணவர்கள் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்குச் சிறப்பாகத் தயாராவதற்கும் உதவும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து செய்தித்தாள் வாசிப்பது சொற்களஞ்சியம், மொழி நடை மற்றும் எழுதும் திறன்களை மேம்படுத்துகிறது என்று கல்வ...









