
ஆப்பிரிக்காவில் கடற்கொள்ளையர்களால் தமிழகத்தைச் சேர்ந்த 2 என்ஜினியர்கள் உட்பட 7 பேர் கடத்தல்
ஆப்பிரிக்காவில் தமிழகத்தைச் சேர்ந்த 2 என்ஜினியர்கள் உட்பட 7 பேர் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமண பிரதீப் முருகன், தனியார் கப்பல் நிறுவனத்தில் அதிகாரியாக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், அவர் கேமரூனுக்குச் செல்லும் ஒரு கப்பலில், கரூரைச் சேர்ந்த சதிஷ்குமார் செல்வராஜ், பீகாரைச் சேர்ந்த சந்தீப் குமார் சிங், கேரளாவைச் சேர்ந்த ராஜீந்திரன் மற்றும் ருமேனியாவைச் சேர்ந்த 3 பேருடன் இணைந்து பயணித்தார்.
மார்ச் 17 ஆம் தேதி, மத்திய ஆப்பிரிக்காவில் வடகிழக்கு சாண்டோ அன்டோனியா பிரின்ஸ் பகுதியில், கப்பல் 40 கடல் மைல் தொலைவில் செல்லும் போது, பயங்கர ஆயுதங்களுடன் வந்த கடற்கொள்ளையர்கள் முற்றுகையிட்டனர். அதை உணர்ந்த லட்சுமண பிரதீப் முருகன் மற்றும் பிற குழுவினர், கப்பலில் இருந்த எச்சரிக்கை மணியை செயல்படுத...