Tuesday, March 17பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

முக்கிய செய்தி

ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்: விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச்செயலாளரை சஸ்பெண்ட் செய்தார் கட்சித் தலைவர் திருமாவளவன்!

ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட்: விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச்செயலாளரை சஸ்பெண்ட் செய்தார் கட்சித் தலைவர் திருமாவளவன்!

முக்கிய செய்தி
ஆதவ் அர்ஜுனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்' அமைப்பின் சார்பில், 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, "தமிழகத்தில் நிலவும் மன்னராட்சி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். கட்சியின் நலன்களை கருத்தில் கொண்டு, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட மூவரின் தலைமையிலான நிர்வாகக் குழு, ஆதவ் அர்ஜுனாவின் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில், ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். இந்த ஆதவ் அர்ஜுனா, ‘லாட்டரி மன்னன்’ சாண்டியாகோ மார்ட்டினின் மருமகன் ஆவார்....
திருவண்ணாமலை மண்சரிவு: உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் நிவாரணம் – உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

திருவண்ணாமலை மண்சரிவு: உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் நிவாரணம் – உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

முக்கிய செய்தி
திருவண்ணாமலை வ.உ.சி நகரில் ஏற்பட்ட மண்சரிவால், பாறைகள் உருண்டு வீடு புதையுண்டதில், 5 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தது. தேசிய பேரிடர் மீட்பு குழு 18 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த கடுமையான முயற்சிகளின் பின்னர், அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் விவரம்: ராஜ்குமார் (32), மீனா (26) குழந்தைகள்: கவுதம் (9), இனியா (7), மகா (12), வினோதினி (14), ரம்யா (12). சம்பவம் நடந்த போது, குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். மலைப்பகுதியில் இருந்து மழைநீர் மற்றும் பாறைகள் உருண்டுவந்ததை கண்டு அச்சத்தில் வீடு புகுந்தபோது, மண் மற்றும் பாறைகள் வீடு முழுவதையும் மூடி விட்டன. மண்சரிவு இடிபாடுகளுக்குள் இருந்து உடல்களை மீட்கும் போது அங்கு இருந்த அனைவரும் கண்கலங்கினர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு, உயிரி...
காற்றழுத்த மண்டலம் தற்போது எங்கு உள்ளது? எங்கே எங்கே மழை பெய்யும்? – வானிலை மையத்தின் புதிய தகவல்.

காற்றழுத்த மண்டலம் தற்போது எங்கு உள்ளது? எங்கே எங்கே மழை பெய்யும்? – வானிலை மையத்தின் புதிய தகவல்.

முக்கிய செய்தி
பெஞ்சல் புயல் கரையை கடந்தபின், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடைந்து நகர்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவை கடந்து, அரபிக்கடலுக்கு சென்ற பின்னரும் மீண்டும் காற்றழுத்த மண்டலமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது. புயல் பாதை வழியே இடங்களுக்கு மழை மற்றும் கனமழை அதிகம் இருக்கும் என்பதால், பொதுமக்கள் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலாவுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது....