
தமிழகத்தின் வேளாண் முன்னேற்றம்: 4 ஆண்டுகளில் சாதனைகள் பட்டியலிட்டது அரசு
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, வேளாண் வளர்ச்சி 5.66 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்ற முதல் ஆண்டிலேயே, வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன்முறையாகும். இதைத் தொடர்ந்து, மொத்தம் 5 நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, ₹1,94,076 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
2012 முதல் 2021 வரை சராசரியாக 1.36% அளவிலிருந்த வேளாண் வளர்ச்சி, திமுக ஆட்சி தொடங்கிய 2021 முதல் 2024 வரையில் 5.66% ஆக உயர்ந்துள்ளது. இது வரலாற்று சாதனையாகக் கருதப்படுகிறது.
முக்கிய பயிர்களின் உற்பத்தி சாதனைகள்
முதலிடம்: கேழ்வரகு, கொய்யாஇரண்டாம் இடம்: மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக் கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துகள்
மூன்றாம் இடம்: வேர்க்கடலை, தென்னை
2020-21 ...