இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க, லட்சியம் நிறைந்த மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (Free Trade Agreement - FTA) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் இன்று இதை அறிவித்தனர். பிரதமர் மோடி இன்று திரு. லக்ஸனுடன் தொலைபேசி மூலம் உரையாடினார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. ஒன்பது மாதங்கள் என்ற சாதனை நேரத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்திருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பகிரப்பட்ட லட்சியத்தையும் அரசியல் உறுதியையும் பிரதிபலிக்கிறது என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இருதரப்புப் பொருளாதார ஈடுபாட்டை கணிசமாக ஆழப்படுத்து...









