சீனக் கடலடித் தங்கக் கண்டுபிடிப்பு: உலக தங்கச் சந்தையை உலுக்கும் அறிவிப்பு!
ஆசியாவிலேயே மிகப்பெரிய கடலடி தங்கப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடலுக்கு அடியில் உறைந்திருந்த இந்த அபூர்வ தங்க இருப்பு, உலக தங்கச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நீண்டகால கனிம ஆய்வுத் திட்டங்களின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பயனாக, கடலடித் தங்கத்தை சுரங்கம் தோண்டி எடுக்கும் பணிகளுக்கு சீனா தயாராகி வருகிறது.
இந்த தங்கப் படிமம், ஷான்டாங் மாகாணத்தின் லைஷோ கடற்கரைக்கு அருகே, கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. யான்டாய் நகர அரசாங்கம் நடத்திய உயர்மட்டக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, மேற்கொள்ளப்பட்ட புவியியல் ஆய்வுகள் மூலம் இப்பகுதியில் 562 டன் உறுதிப்படுத்தப்பட்ட தங்க இருப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு டன் தாதுவுக்கு சராசரியாக 4.2 கிராம் தங்கம் கிடைக்கும் என அதிகா...









