2028க்குள் ‘ஏர் டாக்சி’ சேவை; இந்தியாவில் எலக்ட்ரிக் விமான டாக்ஸி சோதனைகள் தீவிரம்.
நகர்ப்புற போக்குவரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவில் விரைவில் ‘ஏர் டாக்சி’ சேவை தொடங்கப்பட உள்ளது. விண்வெளித் துறை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ‘சரளா ஏவியேஷன்’, 2028க்குள் எலக்ட்ரிக் ஏர் டாக்சி சேவையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான கள சோதனைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில், இருசக்கர வாகனங்களைப் போலவே எதிர்காலத்தில் வான் வழியாக குறுகிய தூர பயணங்களை மேற்கொள்ளும் ‘ஏர் டாக்சி’ சேவைகளை அறிமுகப்படுத்த பல சர்வதேச நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த போட்டி சூழலில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ‘சரளா ஏவியேஷன்’ நிறுவனம், முழுமையாக எலக்ட்ரிக் அடிப்படையிலான ஏர் டாக்சிகளை வடிவமைத்து வருகிறது.
வரும் 2028க்குள் இந்த சேவையை வணிக ரீதியாக அறிமுகப்படுத்...









