கனிம வளத்துறையில் அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கில் நஷ்டம், அதிகாரிகள் மீது நடவடிக்கை.
திருநெல்வேலி மாவட்ட கனிம வளத்துறையில் நடைபெற்ற கோடிக்கணக்கான வருவாய் இழப்பு தொடர்பான புகார்கள் மற்றும் அதற்கடுத்த விசாரணையின் விளைவாக, பல்வேறு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு நிதிக்கு ஏற்பட்ட நஷ்டம் தெரிய வந்ததால், அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டும், சிலர் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டும் உள்ளனர்.
மாவட்டத்தில் 50க்கும் அதிகமான கல் குவாரிகள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இங்கு ஜல்லி மற்றும் எம் சாண்ட் தயாரிக்கும் கிரஷர் ஆலைகளுக்காக கனிம வளத்துறை நடைச்சீட்டு (Transit pass) வழங்கி வருகிறது. நடைச்சீட்டு ஒன்றுக்கு, அதற்கு சமமான அளவில் மட்டும் கற்கள், ஜல்லி அல்லது எம் சாண்ட் வாகனங்களில் ஏற்றி அனுப்ப அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், நடைச்சீட்டின் எண்ணிக்கைக்கு மீறி அனுமதிகள் வழங்கப்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. உதாரணமாக, 100 நடைச்சீட்டுகள் மட்டும் வழ...









