தாயுமானவர் திட்டத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு கையெழுத்து பெற்றும் ரேஷன் வழங்க அனுமதி.
தமிழகத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் ‘தாயுமானவர் திட்டம்’ தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கும்போது, கைரேகை அல்லது கண் கருவிழி பதிவேற்றம் சாத்தியமாகாத நிலையில், பயனாளிகளிடமிருந்து கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டு ரேஷன் பொருட்களை வழங்கலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் சிவராசு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த திட்டத்தின் மூலம், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் செல்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், அவர்களது வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. ரேஷன் விற்பனையாளர்கள் மாதத்தில் இரண்டு நாட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களது கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் விவர...









