போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு அரசு நிவாரணம்!
போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் விவகாரம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பரிவு தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்புவனத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அஜித்குமார் மாயமான நிலையில் உயிரிழந்தார் என கூறப்படுகிறது. அவரது மறைவால் குடும்பமே திடீரென துன்பத்தில் ஆழ்ந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவுப்படி மாநில கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியகருப்பன் நேற்று நேரில் சென்று அஜித்குமார் குடும்பத்தினரிடம் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன்போது அமைச்சர் பெரியகருப்பன் தமிழக முதல்வர் ஸ்டாலினை மொபைல் போனில் அழைத்து குடும்பத்துடன் பேச வைத்தார். முதல்வர் ஸ்டாலின் அஜித்குமாரின் தாய் மாலதியுடன் பேசினார். அப்போது அவர், “ரொம்ப சோர்வா இருக்காதீங்க...









