தேனி நகராட்சி கமிஷனர் மற்றும் மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை!
வருமானத்தை விட அதிகமாக ரூ.2.73 கோடி மதிப்பிலான சொத்துகள் குவித்ததாக தேனி நகராட்சி கமிஷனர் ஏகராஜ் மற்றும் அவரது மனைவி பிளாரன்ஸ் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை போரூர் அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த ஏகராஜ் (வயது 58), 10 மாதங்களுக்கு முன் தேனி நகராட்சியின் கமிஷனராக பணியேற்றிருந்தார். தற்போது மருத்துவ விடுப்பில் உள்ள இவர், முந்தைய காலகட்டங்களில் பல்வேறு நகராட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அவரது மனைவி பிளாரன்ஸ் (வயது 50) சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வியியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஏகராஜ் 1994ம் ஆண்டு எரிசக்தித் துறையில் தட்டச்சராக அரசு பணியில் சேர்ந்தவர். தொடர்ந்து 23 ஆண்டுகள் பணிப்புரிந்த பிறகு, 2017ம் ஆண்டு நகராட்சி கமிஷனராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் ...









