தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் என்.ஆர்.ஐ., கோட்டா மோசடி!
நாடு முழுவதும் மருத்துவக் கல்வியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், தனியார் மருத்துவக் கல்லுாரிகள் என்.ஆர்.ஐ., (வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள்) கோட்டாவில் மோசடி செய்து 18,000 மாணவர்களுக்கு போலியான சேர்க்கைகள் வழங்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.
இந்த அதிர்ச்சி தகவலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது அமலாக்கத்துறை (ED). விசாரணையின் போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் வங்கி வைப்புகளையும் முடக்கியுள்ளது.
நீட் தேர்வு – முறைகேடுகளுக்கான பின்வாசல்
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைகள் 'நீட்' நுழைவுத் தேர்வு வழியாக மட்டுமே நடைபெறுகிறது. முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு இந்த தேர்வை கொண்டு வந்திருந்தாலும், அதனை தாண்டி சில தனியார் கல்லுாரிகள் 'என்.ஆர்.ஐ., கோட்டா'வை தவறாக பயன்படுத்தியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்...









