அமெரிக்காவில் இந்தியர் கொடூரக்கொலை, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை; டிரம்ப் உறுதி.
டல்லாஸில் இந்தியர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கியூபாவைச் சேர்ந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கோடரியால் தலை வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். சந்திர மௌலி நகமல்லையா கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் டல்லாஸில் உள்ள டவுன்டவுன் சூட்ஸ் என்ற ஹோட்டலில் மேலாளர் ஆக பணிபுரிந்து வந்தார். இவரை கொலை செய்தததுக்கு பல்வேறு அமெரிக்க பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், இந்தியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக ...









