சுசீர் பாலாஜி, OpenAI ன் முன்னாள் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியாளர் மரணம்!
சுசீர் பாலாஜி, ChatGPTயின் சாட்போட்டைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுத்தப்படும் அபரிமிதமான இணையத் தரவை ஒருங்கிணைத்து சேகரித்தவர். 26 வயதுடைய இந்த என்ஜினீயர், சான் பிரான்சிஸ்கோ குடியிருப்பில் இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாலாஜி நவம்பர் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் புக்கனன் தெருவில் உள்ள தனது குடியிருப்பில் இறந்து கிடந்தார்.
இவர் நவம்பர் 2020 முதல் ஆகஸ்ட் 2024 வரை OpenAI இல் பணியாற்றினார். OpenAI நிறுவனம் பதிப்புரிமைச் சட்டத்தை மீறுவதாக சுசீர் பாலாஜி அக்டோபர் மாதம் தனது X வலைப்பதிவில் குற்றம் சாட்டியிருந்தார். பாலாஜி நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் "நான் நம்புவதை நீங்கள் நம்பினால், நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும்," என்று கூறியிருந்தார்.
முதற்கட்ட விசாரணையில், "கொலையோ அல்லது எந்த முறைகேடு நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடை...