சீனா செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு வரும் 22 முதல் புதிய ‘ஆன்லைன்’ விசா.
புதுடில்லி: இந்தியர்களுக்கு சீனா பயணிக்க புதிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. சீனா செல்ல விரும்பும் இந்தியர்கள் இனி இணையதளம் மூலமாகச் சுலபமாக விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று டில்லியில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு ஆன்லைன் தளம் வரும் 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது.
கல்வான் மோதலுக்கு பின் உறவில் ஏற்பட்ட விரிசல்:2020 ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன இராணுவத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை கடுமையாக பாதித்தது. இதன் பின்னர், இரு நாடுகளுக்குள்ள பயணத் தொடர்புகள் பெருமளவில் நிறுத்தப்பட்டன.
சீனப் பிரஜைகள் இந்தியாவிற்கு வர கட்டுப்பாடுகள்:- சுற்றுலா விசா முற்றிலும் ரத்து- இந்தியா - சீனா நேரடி விமான சேவைகள் நிறுத்தம்இந்த நடவடிக்கைகள் இரு தரப்பின் அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளிலும் சீர்குலைவை ஏற்பட...









