
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை (ED) பதிவு செய்த வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
2006–2011 காலகட்டத்தில் சென்னை திருவான்மியூரில் தமிழக வீட்டு வசதி வாரியத்திலிருந்து வீட்டு மனையை முறைகேடாகப் பெற்றதாக ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை 2011-ல் வழக்குப் பதிவு செய்தது. இதனைக் கொண்டு, 2020-ல் அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைக் சட்டத்தின் கீழ் புதிய வழக்கை பதிவு செய்தது.
இதை ரத்து செய்யக்கோரி ஜாபர் சேட் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். பின்னர், விசாரணை மீண்டும் தொடரப்பட்டதற்கும் அதில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கும் எதிராக ஜாபர் சேட் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் வழக்கை தீர்ப்பு வழங்குவதாக கூறி மீண்டும் விசாரணை நடத்தியது ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறி, அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்தது. மேலும், மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தை தொடர்புகொள்ளலாம் எனவும் உத்தரவிட்டது.