இறைச்சி சாப்பிடுவதை தடை செய்த உலகின் முதல் நகரம் இந்தியாவில் தான் உள்ளது. குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம், அசைவ உணவை அதிகாரப்பூர்வமாக தடை செய்த உலகின் முதல் நகரமாக வரலாற்றில் முத்திரையை பதித்துள்ளது. அந்த நகரம் தான் பாலிதானா. இது ஒரு முக்கிய ஜைன புனித யாத்திரை ஸ்தலமாக அறியப்படுகிறது.
ஜெயின் சமூகத்தின் மதக் கொள்கைகளை மதிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தடையை அமல்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக அகிம்சை மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கத்திற்கான அர்ப்பணிப்பாக கருதி தடை செய்யப்பட்டதாக தெரிகிறது. தடையை அமல்படுத்தியதில் இருந்து, பாலிதானா அதன் சைவ உணவில் ஏற்றம் கண்டுள்ளது. இதன் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு சைவ உணவகங்கள் உருவாகி வருகின்றன.