Friday, March 20பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பிரதமர் மோடி ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் பேச்சு.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி, அவருக்கும் கத்தார் மக்களுக்கும் ஈத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமூக ஊடகப் பதிவு ஒன்றில், கத்தாருடன் இந்தியா உறுதுணையாக நிற்கிறது என்பதையும், அப்பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிக்கிறது என்பதையும் தாம் மீண்டும் வலியுறுத்தியதாகப் பிரதமர் குறிப்பிட்டார். அங்குள்ள இந்தியச் சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் கவனிப்பு மற்றும் ஆதரவுக்கு அவர் நன்றியைத் தெரிவித்ததுடன், அப்பிராந்தியத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவ வேண்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கடல்வழிப் போக்குவரத்தை இந்தியா மற்றும் கத்தார் ஆகிய இரு நாடுகளும் ஆதரிப்பதாக திரு. மோடி மேலும் கூறினார்.