Saturday, August 29பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

ஹங்கேரியில் நடைபெற்ற ஸ்குவாஷ் ஓபன் பட்டத்தை வென்ற வேலவன் செந்தில்குமார்!

ஹங்கேரியில் நடைபெற்ற PSA புடாபெஸ்ட் ஸ்குவாஷ் ஓபன் இறுதிப் போட்டியில், உள்ளூர் வீரரான பாலாஸ் ஃபர்காஸை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் பட்டத்தை வென்றார்.

காலிறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ளவரும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவருமான எய்ன் யோவ் எங்கை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய அவர், பின்னர் விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில் சக இந்திய வீரரான வீர் சோத்ரானியை 3-2 என்ற கணக்கில் வென்று, இந்தப் பட்டத்தை நோக்கி ஒரு அற்புதமான பயணத்தை மேற்கொண்டார். இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதன் மூலம், செந்தில்குமார் தனது இந்த அற்புதமான வெற்றியை பத்தி செய்தார்.