
வாரத்தின் முதல் நாளான இன்று (மார்ச் 17), தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் விலை ரூ.8,210 ஆக உள்ளது.
மார்ச் 14 (வெள்ளி) அன்று, 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.8,300, சவரனுக்கு ரூ.66,400 என்ற உச்ச விலையில் விற்பனையாகியது. அதற்கடுத்த நாள் (மார்ச் 15, சனிக்கிழமை), தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 சரிந்து ரூ.8,220 ஆகவும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760 ஆகவும் மாற்றமடைந்தது.
நேற்று (மார்ச் 16) விடுமுறை காரணமாக விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இன்று (மார்ச் 17) தங்கம் விலை மேலும் ரூ.80 சரிந்து, ஒரு சவரன் ரூ.65,680, கிராம் விலை ரூ.8,210 ஆக உள்ளது.