Thursday, April 24பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இன்றைய நாள் வரலாற்றில் சிறப்பாக பொறிக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

மாநில கூட்டாட்சியின் அடிப்படையை உறுதிப்படுத்த, இன்றைய நாள் வரலாற்றில் சிறப்பாக இடம்பிடிக்கும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தொகுதி மறு வரையறை மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், திமுக இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை கிண்டியில் தொகுதி மறு வரையறை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், கூட்டத்திற்கு வந்துள்ள முதல்வர்களும் அரசியல் தலைவர்களும் ஆவலுடன் வரவேற்கப்படுகிறார்கள் என்று கூறினார். மேலும், “மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்க, இன்றைய நாள் வரலாற்றில் முக்கியமானதாக அமையும். நாடு முன்னேற்றம் அடைய, நியாயமான தொகுதி வரையறையை உறுதி செய்ய மாநிலங்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன” என அவர் தெரிவித்தார்.