
இந்திய தாக்குதலில் ‘பாகிஸ்தான் ராணுவத்திற்கு பெரும் சேதம்’!
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, சனிக்கிழமை மாலை ஜம்மு, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறியது. இருப்பினும், இந்திய படைகள் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நான்கு நாட்கள் தொடர்ச்சியான சண்டையில் பாகிஸ்தானின் இராணுவம் பெரும் இழப்புகளைச் சந்தித்தது.
சனிக்கிழமை மாலை, ஆபரேஷன் சிந்தூர் குறித்த சிறப்பு விளக்கவுரையில், கர்னல் சோபியா குரேஷி உரையாற்றினார், "இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தின - அதன் இராணுவ உள்கட்டமைப்புகள், மூலோபாய சொத்துக்கள் அல்லது வான் சொத்துக்கள் அழிக்கப்பட்டன".
இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் உள்ள விமானப்படை தளங்களை சேதப்படுத்தியதாகவும் அவர் மேலும் கூறினார். "அது ...