பஞ்சாப்: முன்னாள் துணை முதல்வர் மீது கொலை முயற்சி முறியடிப்பு – என்ன நடந்தது?
பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வரும் ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல், மத தண்டனையை நிறைவேற்றுவதற்காக பொற்கோவிலின் வாசலில் காவலாளியாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மத தண்டனை பின்னணி:2007 முதல் 2017 வரை பஞ்சாபில் ஷிரோமணி அகாலி தளம் அரசு எடுத்த முடிவுகளுக்கு எதிராக அகல் தக் சாஹிப் சீக்கிய மத குழு, சுக்பீர் சிங் பாதல் மற்றும் அவருடன் இருந்த சிலருக்கு மத தண்டனை விதித்தது. இதன்படி, சுக்பீர் சிங் இரண்டு நாட்கள் பொற்கோவிலின் வெளியில் பணியாளர்களின் உடை அணிந்து ஒரு மணிநேரம் காவலராக சேவை செய்ய வேண்டும் என்று உத்தரிக்கப்பட்டது.
தண்டனையின் இரண்டாம் நாளில், அவர் சேவை செய்யும் போது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. இதில் பாதல் எந்த வித பாதிப்பும் இன்றி பிழைத்தார், மேலும் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
துப்பாக்கிச் ச...


