
ஒடிசாவின் முன்னாள் ஐடி அமைச்சர் சைபர் குற்றவாளிகளிடம் ரூ.1.4 கோடியை இழந்தார்
ஒடிசா எம்.எல்.ஏ.வும் முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ஒருவர், சைபர் மோசடியில் சுமார் ஒன்றரை மாதங்களில் ரூ.1.4 கோடியை இழந்துள்ளதாக திங்களன்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் என ஏழு பேரை காவல்துறை கைது செய்தது.
இது தொடர்பாக ஜனவரி மாதம் காவல்துறையில் புகார் அளித்த முன்னாள் அமைச்சர், தனது நண்பர் ஒருவர் தனது வர்த்தகக் கணக்கைப் பயன்படுத்தி பணத்தை இழந்ததாகக் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவர்களது கூட்டாளிகளும் வர்த்தக ஆய்வாளர்களாக நடித்து, ஐபிஓக்கள் (IPO) , பங்குகள் மற்றும் பிற வகையான வர்த்தகங்களில் பணத்தை முதலீடு செய்ய மக்களை வற்புறுத்தி, அதிக வருமானம் தருவதாக உறுதியளித்ததாக காவல்துறை அதிகாரி கூறினார்.
விசாரணையின் போது, குற்றப்பிரிவின் சைபர் குற்றப் பிரிவு, ந...