‘ட்ரோன்’ பயிற்சி பெற்ற ‘பைரவ்’ சிறப்பு படை வீரர்களை உருவாக்கியது நமது ராணுவம்!
நவீன போர்க்கால சவால்களை திறம்பட எதிர்கொள்ளும் நோக்குடன், இந்திய பாதுகாப்புப் படைகளை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட, ‘பைரவ்’ என்ற புதிய சிறப்பு படைப்பிரிவை இந்திய ராணுவம் உருவாக்கியுள்ளது. இந்த படைப்பிரிவின் முக்கிய தனிச்சிறப்பு, இதில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்களை இயக்குவதில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் என்பதே ஆகும்.
பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, பாதுகாப்புத் துறையில் பல்வேறு கட்டமைப்பு மாற்றங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொண்டு வருகிறது. எதிர்கால போர்களில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் என்ற புரிதலின் அடிப்படையில், வீரர்களுக்கான பயிற்சி மு...









