இந்தியாவில் பிறந்த சித்தார்த் முத்துகல் ஜெர்மன் பார்லிமென்டில் வரலாற்றுச் சாதனை நோக்கி முன்னேறுகிறார்.
ஜெய்ப்பூரிலிருந்து ஜெர்மன் பார்லிமென்டுக்கு: இந்தியாவில் பிறந்த சித்தார்த் முத்துகல் வரலாற்று வெற்றியை நோக்கி பயணம்
சித்தார்த் முத்துகல், இந்தியாவில் பிறந்தவர் மற்றும் இந்திய வம்சாவளியினர், பவேரியா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி கிறிஸ்தவ சமூக சங்கத்தின் (CSU) சார்பில் பார்லிமென்ட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் முதல் இந்தியர்.
ஜெர்மன் பார்லிமென்ட் அல்லது புந்தெஸ்டாக் தேர்தல்கள் 2025 பிப்ரவரி 23 அன்று நடக்கவுள்ளது. இதில், ஜெய்ப்பூரில் பிறந்து 21 ஆண்டுகளாக ஜெர்மனியை தனது சொந்த ஊராகக் கொண்டுள்ள சித்தார்த் முத்துகல், தனது கடின உழைப்பின் மூலம் ஒரு உணவக உதவியாளராக இருந்து பெரும் நிறுவனத்தின் தலைவராக உயர்ந்தார். செய்தியாளர்களுக்கு பேசிய முத்துகல், "ஜெர்மனியில் இந்தியர்கள் மிகவும் கல்வியறிவு மிக்கவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருப்பதால் ஜெர்மன் சமுதாயத்துக்கும் பொருளாத...









