இந்தியா, பாகிஸ்தான் அணுசக்தி நிலையங்களின் பட்டியலைப் பரிமாறிக்கொண்டன!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி நிலையங்கள் மற்றும் வசதிகளுக்கு எதிரான தாக்குதலைத் தடை செய்வதற்கான ஒப்பந்தத்தின் கீழ் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் வசதிகளின் பட்டியலை இன்று பரிமாறிக்கொண்டன. இந்தப் பட்டியல் புது டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரகங்கள் வழியாக ஒரே நேரத்தில் பரிமாறப்பட்டது.
வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி தங்களின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் வசதிகள் குறித்த தகவல்களை ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொள்கின்றன என்று தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 1988 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது மற்றும் 1991 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இரு நாடுகளுக்கும் இடையே இத்தகைய பட்டியல்கள் பரிமாறப்படுவது இது தொடர்ந்து 35வது முறையாகும்....








