
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், பிரித்தானியாவில் தேசிய வாழ்வாதார ஊதிய உயர்வு அமலாகியுள்ளதால், முழு நேரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.
- 21 வயதுக்கு மேற்பட்டவர்களின் குறைந்தபட்ச மணி நேர ஊதியம் £11.44 லிருந்து £12.21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 18 முதல் 20 வயதிற்குட்பட்டவர்களுக்கு, மணி நேர ஊதியம் £8.60 லிருந்து £10.00 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- முழு நேரப் பணியாளர்களுக்கு மாதம் £117 வரை கூடுதல் ஊதியம் வழங்கப்படும்.
3 லட்சம் பணியாளர்கள் இந்த ஊதிய உயர்வால் பயனடைய உள்ளதாக, பிரித்தானிய துணை பிரதமர் ஏஞ்சலா ரேய்னர் தெரிவித்துள்ளார்.
இந்த அதிகரிப்பின் காரணமாக, பணியாளர்கள் வருடத்திற்கு £1,400 முதல் £2,500 வரை கூடுதல் வருமானம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.