Thursday, March 19பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

Author: daya.anand.s

திருவண்ணாமலை மண்ணில் மாட்டிய 7 பேரின் போராட்டம்.. மீட்புக்கு துரிதமாக செயல்படும் படையினர்!

திருவண்ணாமலை மண்ணில் மாட்டிய 7 பேரின் போராட்டம்.. மீட்புக்கு துரிதமாக செயல்படும் படையினர்!

தமிழ்நாடு
திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளனர். அவர்களை மீட்க, பேரிடர் மீட்புக் குழுவினருடன் 100க்கும் மேற்பட்டோர் இடைவிடாது மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலையை (தீபமலை) சுற்றி கடந்த 40 ஆண்டுகளாக 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன, இதில் 20,000க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், அண்ணாமலையார் மலையின் கிழக்கு பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. நேற்று மாலை 4.45 மணியளவில், திருவண்ணாமலை வ.உ.சி நகர், 11வது தெருவின் அருகே மண் சரிவு திடீரென ஏற்பட்டது. பெரிய சத்தத்துடன் பாறை சரிந்து, மண் மூழ்கியதால் 3 வீடுகள் பாதிக்கப்பட்டன. இதில், ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் மூழ்கியதாக தெரிய வருகிறது. சம்பவத்தின் போது,...
காற்றழுத்த மண்டலம் தற்போது எங்கு உள்ளது? எங்கே எங்கே மழை பெய்யும்? – வானிலை மையத்தின் புதிய தகவல்.

காற்றழுத்த மண்டலம் தற்போது எங்கு உள்ளது? எங்கே எங்கே மழை பெய்யும்? – வானிலை மையத்தின் புதிய தகவல்.

முக்கிய செய்தி
பெஞ்சல் புயல் கரையை கடந்தபின், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடைந்து நகர்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவை கடந்து, அரபிக்கடலுக்கு சென்ற பின்னரும் மீண்டும் காற்றழுத்த மண்டலமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக கூறப்படுகிறது. புயல் பாதை வழியே இடங்களுக்கு மழை மற்றும் கனமழை அதிகம் இருக்கும் என்பதால், பொதுமக்கள் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலாவுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது....