ஆறு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!
இரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வலையமைப்பை குறிவைத்து, ஆறு இந்திய நிறுவனங்கள் உட்பட மொத்தம் 20 நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்டுள்ள ஆறு இந்திய நிறுவனங்கள்சில இந்திய நிறுவனங்கள் இரானில் இருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வாங்கவும் விற்கவும் மில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தங்களைச் செய்தன எனக் கூறுகிறது அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை.
அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்:இந்த பெட்ரோ கெமிக்கல் வர்த்தக நிறுவனம், ஜனவரி 2024 முதல் டிசம்பர் 2024 வரை இரானில் இருந்து பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்து வாங்கியது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த காலகட்டத்தில், 84 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.
குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிம...









