வடகிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் ராணுவம் குவிப்பு – NOTAM வெளியிட்ட இந்திய இராணுவம்!
இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்திய இராணுவமும் விமானப்படையும், நாட்டின் வடகிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் மிகப்பெரிய அளவிலான ராணுவ மற்றும் வான்வழி பயிற்சிகளை தொடங்கியுள்ளன.
இந்தியாவின் வடகிழக்கு எல்லை பகுதி, சீனா, பூடான், மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகளுடன் பகிர்ந்து கிடக்கிறது. இப்பகுதி புவியியல் மற்றும் பாதுகாப்பு ரீதியாக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சமீபகாலங்களில் சீனாவின் எல்லைப் பகுதியில் அதிகரித்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, இந்தியா தனது வான்வழி பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் NOTAM (Notice to Airmen) எனப்படும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
NOTAM என்றால் என்ன?NOTAM என்பது “Notice to Airmen” எனப்படும் விமானிகளுக்கான அறிவிப்பு. இது குறிப்பிட்ட பகுதி அல்லது காலப்பகுதியில் வான்வெளி பாதுகாப்பு நடவடிக்கைக...









