செவ்வாய் கிரகத்தில் கட்டிடங்கள் கட்டும் புரட்சிகர முயற்சி: பாக்டீரியாவால் உருவாகும் ‘Mars Concrete’!
மனிதனை பூமிக்கு அப்பாற்பட்ட கிரகங்களில் குடியேறச் செய்ய வேண்டும் என்ற கனவு, பல தசாப்தங்களாக விண்வெளி விஞ்ஞானிகளை ஆக்கிரமித்து வருகிறது. அதிலும், பூமிக்கு மிக அருகில் உள்ள செவ்வாய் கிரகமே மனிதர்களின் எதிர்கால குடியேற்ற தளமாக ஆராயப்பட்டு வருகிறது. நாசா மற்றும் பல சர்வதேச விண்வெளி ஆய்வு மையங்கள், 2030களில் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன. எனினும், முக்கிய சவால்,செவ்வாயில் வீடுகள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை எப்படி உருவாக்குவது?
விண்வெளிப் பயணத்தின் மிகப்பெரிய சவால் – கட்டுமானப் பொருட்களின் செலவு:மனிதரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவதற்கே கோடிக்கணக்கில் செலவாகும் நிலையில், அவர்களுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்களையும் பூமியில் இருந்து கொண்டு செல்வது முடியாத காரியமாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே, செவ்வாயிலே உள்ள வளங்களைப் பயன்படுத்தி கட்டுமானப...









