2005ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி, நமது பொன் புதுயுகம் தமிழ் மாத இதழுக்காக, இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள், நமது இதழின் பெருமையை உயர்த்தும் வகையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். அவரது கடிதத்தில், தமிழர் பெருமைக்குரிய சிங்காரவேலரின் தத்துவங்களையும் செயல்பாடுகளையும் மையமாகக் கொண்ட நமது மாத இதழ், சிறப்பாக முன்னேற வேண்டும் என்ற நற்சிந்தனைகளை அவர் பகிர்ந்திருந்தார்.
![](https://puduyugam.com/wp-content/uploads/2024/12/pm-manmohansingh-1024x677.jpg)
மன்மோகன் சிங் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிடுவதாவது:
“சிறந்த தொழிலாளர் தலைவராக, சுதந்திரப் போராட்ட வீரராக, மற்றும் பகுத்தறிவாளராக விளங்கிய Late. சிங்காரவேலர் அவர்களின் சிந்தனைகளையும், பண்புகளையும் வெளிப்படுத்தும் தமிழ் மாத இதழ் ‘பொன் புதுயுகம்’ வெளியாகிறது என்ற தகவல் மகிழ்ச்சியளிக்கிறது.
நமது நாட்டின் முதலாவது தொழிலாளர் தலைவராக போற்றப்படும் Late. சிங்காரவேலர், தொழிலாளர்களின் நலனுக்காகப் பாடுபட்டு, தொழிலாளர் இயக்கத்தின் அடையாளமாக விளங்கியவர். இந்த தமிழ் மாத இதழ், அவருடைய வாழ்வு மற்றும் செயல்களை மையமாகக் கொண்டு, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் தேவையான அவசியமான சிந்தனைகளை பரப்பும் என நம்புகிறேன். சிங்காரவேலரின் பங்களிப்புகள் மற்றும் தன்னலமற்ற வாழ்க்கை நமக்கு மகத்தான புரிதலையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன.”
இத்தகைய மாமனிதரின் எண்ணங்களையும் பணிகளையும் சிறப்பாக எடுத்துரைக்கும் நமது மாத இதழுக்கு, மன்மோகன் சிங் அவர்களின் வாழ்த்துக்கள் நம்மை மேலும் உற்சாகப்படுத்துகிறது. இந்த வாழ்த்துச் செய்தி நமது பொன் புதுயுகம் இதழின் அடையாளமாக, தமிழ் வாசகர்களின் மனங்களில் புதுமையான திடலையும் சிந்தனையையும் உருவாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
மறைந்த மாமனிதர் ஐயா மன்மோகன் சிங் அவர்களின் குடும்பத்திற்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.