
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள கிராமங்களில் வெள்ள நீர் பயிர்களை அடித்து சென்றது. வெங்காயம், மிளகாய், சோளம், மல்லி போன்ற பயிர்கள் நாசமாகின. இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் அடித்து செல்லப்பட்டதாகவும், கடனை கட்டுவதே கடினம் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர். அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.