ChatGPT குறிப்பிடத்தக்க செயலிழப்பைச் சந்தித்து வருகிறது, உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்கள் chatbot ஐ இன்று பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
![](https://puduyugam.com/wp-content/uploads/2024/12/chatgpt-1024x576.jpg)
ChatGPT ன் OpenAI நிறுவனம் சமூக ஊடகங்களில், “நாங்கள் இப்போது ஒரு செயலிழப்பை அனுபவித்து வருகிறோம். சிக்கலைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மன்னிக்கவும், நாங்கள் உங்களிடம் விரைவில் தெரியப்படுத்துவோம்!” என்று கூறியுள்ளனர்.
இன்றைய சூழலில் பலருக்கு ChatGPT இல்லாமல் பணி செய்வதே மிகவும் சிரமமாக உள்ளதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு பயனாளர், “நான் இப்படி ChatGPT வேலை செய்யாமல் இருப்பதற்காகவா ஒரு மாதத்திற்கு $20 செலுத்துகிறேன்? இன்றிரவு நான் ஒரு பணியை முடித்தாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இன்னொரு பயனாளர், “சீக்கிரம் சரி செய்யுங்கள், நான் இப்போது செத்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பு ChatGPT இல்லாமல் நான் எப்படி வாழ்ந்தேன்? ”என்று தன் சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.