Saturday, January 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

மழை காரணமாக 16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் நீடிக்கிறது.


இதனால், இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக, கீழ்க்கண்ட 16 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.,12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1. சென்னை

2. விழுப்புரம்

3. மயிலாடுதுறை

4. தஞ்சாவூர்

5. புதுக்கோட்டை

6. கடலூர்

7. திண்டுக்கல்

8.  ராமநாதபுரம்

9. காஞ்சிபுரம்

10. திருவாரூர்

11. அரியலூர்

12. செங்கல்பட்டு

13. ராணிப்பேட்டை

14. திருவள்ளூர்

15. திருவண்ணாமலை

    16.கரூர்