
ரஷ்யாவும் வட கொரியாவும் தங்கள் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் சாலைப் பாலத்தை திறந்து வைத்துள்ளன. வட கொரியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்த நடவடிக்கை உதவும் என்று ரஷ்ய அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
டுமென் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்தப் பாலம் ஒரு கிலோமீட்டர் நீளமும் இரண்டு வழித்தடங்களும் கொண்டது என்று ரஷ்ய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியா ஆயுதங்களையும் படைகளையும் வழங்கி வருவதால், சமீப காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளும் பரிமாற்றத் திட்டங்களும் வலுவடைந்து வருகின்றன. பெருந்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், 2024 பிப்ரவரி முதல் வட கொரியா ரஷ்யச் சுற்றுலாப் பயணிகளை வரவேற்று வருகிறது.
