Monday, July 7பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

கிராம உதவியாளர் பணிக்கு 2299 வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு வருவாய்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள கிராம உதவியாளர்களின் பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறப்பு கால முறை ஊதியம் ரூ.11,100/- ரூ.35,100/ என்ற ஊதியகட்டின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் வாரியாக மொத்தம் 2299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தினசரி பத்திரிக்கை விளம்பரம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பகத்திற்கு தெரிவித்தல், இதற்கான அதிகாரப்பூர்வ பத்திரிக்கை விளம்பரம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பகத்திற்கு 06.07.2025 தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெறும் கடைசி நாள் 04.08.2025 ஆகும். 02.09.2025 அன்று தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம உதவியாளர் பணி நியமனத்திற்கு, தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் தேர்வில், தமிழ் ஒரு பாடமாகக் கொண்டு தேர்வு எழுதப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெறப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக தேதிவாரியாக தனிப் பதிவேட்டில் பதியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். விண்ணப்பங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மிதிவண்டி / இருசக்கர வாகனம் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்.


வாசித்தும் எழுதத் தெரிந்தால் (Tamil Read & Write Ability) – 30 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதேபோன்று, வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்தது சம்பந்தப்பட்ட தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல்: 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல்களை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு கிராம உதவியாளர் / VAO உதவியாளர் பதவிக்கான காலியிடங்களை மாவட்ட வாரியாக கீழே பட்டியலிட்டுள்ளோம்.
S.NoDistrictVacancy
1Ariyalur21
2Chennai20
3Chengalpattu41
4Coimbatore61
5Cuddalore66
6Dindigul29
7Dharmapuri39
8Erode141
9Kanchipuram109
10Karur27
11Krishnagiri33
12Madurai155
13Mayiladuthurai13
14Nagapattinam68
15Namakkal68
16Perambalur21
17Pudukottai27
18Ramanathapuram29
19Ranipet43
20Salem105
21Sivagangai46
22Thanjavur305
23Theni25
24Tiruvannamalai103
25Tirunelveli45
26Tirupur102
27Tiruvarur139
28Tiruvallur151
29Trichy104
30Thoothukudi77
31Thenkasi18
32Tirupattur32
33Virudhunagar38
34Vellore30
35Villupuram31
Total Vacancy2299