
தொகுதி சீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் கடும் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டத்தொடரில் தொடர் அமளி
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்றது. இரண்டாவது அமர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏப்ரல் 4ஆம் தேதி வரை தொடரவுள்ளது. அமர்வு துவங்கிய முதல்நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
முடங்கிய பார்லிமென்ட்
இன்று (மார்ச் 20) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியன. லோக்சபாவில், தமிழக எம்.பி.க்கள் தொகுதி சீரமைப்பு விவகாரத்தை விவாதிக்க கோரியதுடன், அமளியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பலமுறை எச்சரித்தும், தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார். அதேபோல், ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவையை ஒத்திவைக்க உத்தரவிட்டார். இதனால், பார்லிமென்ட் இரு அவைகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டன.