
எலான் மஸ்க்கின் xAI ஆல் உருவாக்கப்பட்ட AI கருவிகள், செய்தி சேவையான டெலிகிராமில் இணைக்கப்பட உள்ளன. இந்த கூட்டணி ஒப்பந்தத்தை அறிவித்த டெலிகிராம் தலைவர் பாவெல் துரோவ், தனது நிறுவனம் க்ரோக்கை(Grok) டெலிகிராமின் “பில்லியன்+ பயனர்களுக்கு” விநியோகித்து அதன் பயன்பாடுகளில் ஒருங்கிணைக்கும் என்று கூறினார்.
ஒரு வருடம் நீடிக்கும் இந்த ஏற்பாட்டின் மூலம், தனது நிறுவனம் xAI இலிருந்து $300 மில்லியன் (£223 மில்லியன்) ரொக்கம் மற்றும் பங்குகளைப் பெறும் என்றும், டெலிகிராம் வழியாக விற்கப்படும் xAI சந்தாக்களிலிருந்து 50% வருவாயைப் பெறும் என்றும் திரு துரோவ் கூறினார். “ஒன்றாக, நாங்கள் வெற்றி பெறுகிறோம்!” என்று அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
இந்த இணைப்பு தொழில்நுட்பத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய இரண்டு நபர்களை ஒன்றிணைக்கிறது, எலன் மஸ்க் மற்றும் பாவெல் துரோவ்.
குற்றச் செயல்களைக் குறைக்க தனது செயலியை முறையாக நிர்வகிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், திரு. துரோவ் ஆகஸ்ட் 2024 இல் பிரான்சில் கைது செய்யப்பட்டார். விமர்சகர்கள் டெலிக்ராம் தளத்தை “உங்கள் பாக்கெட்டில் இருண்ட வலை” என்று முத்திரை குத்தினர்.
ஸ்டார்ட்-அப் நியூராலிங்க் முதல் அவரது ராக்கெட் உற்பத்தி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் வரை திரு. மஸ்க் நம்பமுடியாத அளவிற்கு பரந்த அளவிலான தொழில்நுட்ப ஆர்வங்களைக் கொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலும் அவருக்கு முக்கிய பங்கு உண்டு, மேலும் அவரைத் தேர்ந்தெடுக்க பெரிதும் பிரச்சாரம் செய்தார் – இது அவரது சிறந்த நிறுவனமான மின்சார கார் தயாரிப்பாளரான டெஸ்லாவின் விற்பனை சரிவுக்கு பங்களிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். OpenAI மற்றும் பிற AI க்கு போட்டியாக xAI-ஐ உருவாக்கி வருகிறார் எலன் மஸ்க் என்று குறிப்பிடத்தக்கது.